சென்னை:
சென்னை மதுரவாயல் அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிபிசக்கரவர்த்தி என்ற பிளஸ் 2 மாணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று இவர் குடியிருப்பின் 15வது தளமான மொட்டை மாடிக்கு செல்ல முயன்றார். இதற்கான நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனால் ஜன்னல் வழியாக செல்ல முயன்ற போது கால் நழுவி கீழே விழுந்தார்.

சிறிது நேரத்தில் அங்கேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.