டில்லி:

டில்லியில் வருடந்தோறும் நடக்கும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் செங்கோட்டையில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். அவ்வாறு பிரதமரை உரையாற்ற அழைத்து வந்து, உரை முடியும் வரை பின்னால் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, உரை முடிந்த பின் மீண்டும் பிரதமரை அழைத்து சென்று அவரது இருக்கையில் அமர வைக்கும் பணியில் டில்லி பகுதி காமாண்டிங் ஜெனரல் அதிகாரி ஈ டுபடுவார். இவர் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாகும்.

பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த பதவியில் உள்ள மனோஜ் முகுந்து நாராவனே கடந்த 15ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமரின் பின்னால் நிற்கவில்லை. பிரதமர் மோடியை மேடைக்கு அழைந்து வந்து விட்டுவிட்டு, பின்னால் நிற்காமல் பார்வையாளர் பகுதியில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். உரை முடிந்த பிறகு பிரமரை மேடையில் இருந்து அழைத்து வந்தார்.

கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவில் இந்த பதவியில் இருந்த விஜய் சிங் பிரதமர் பேசும் போது பின்னால் நின்று கொண்டிருந்தார். ஆனால், வீடியோ பதிவுகளில் அவர் தெரியாதவாறு சற்று தள்ளி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்த ஆண்டு லெப்படினன்ட ஜெனரல் பிரதமர் பின்னால் நிற்க அவரது சிறப்பு பாதுகாப்பு படையினர் ஒத்திகையின் போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பிரதமர் பேசிய வீடியோக்களில் பின்னால் லெப்டினன்ட் கர்ணல் நிற்பது தெரியவில்லை என்று கூறி மறுத்துள்ளனர். ஆனால், அனைத்து சுதந்திர தின விழாக்களிலும் டில்லி பகுதி ஜெனரல் தலைவர் நிற்பது வழக்கமான விஷயம் என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனை ராணுவ அமைச்சகத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் பிரதமரை மேடைக்கு அழைத்து வரும் பணியில் மட்டும் டில்லி ஜெனரல் தலைவர் ஈடுபடுவார் என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ராணுவம் மற்றும் ராணுவ அமைச்சகம் கருத்து கூற மறுப்பு தெரிவித்துவிட்டன. மேலும், இது பழக்கத்தில் வந்த விஷயம் தான். இதில் எவ்வித அலுவலக நடைமுறையும் கிடையாது என்று தெரிவி க்கப்பட்டுள்ளது.