ராணிப்பேட்டை
அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரத்தியின் படத்துடன் பாஜக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் 56-வது ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அமித்ஷாவை வரவேற்பகதற்காக மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் அமித்ஷாவை வரவேற்கும் வகையில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் அமித்ஷாவிற்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரின் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.00
எமவே பா.ஜ.க.வினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி இதனை மறுத்துள்ளதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.