புதுடெல்லி:
பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் திருமணம் செய்வதற்கான பெண்களின் சட்டப்பூர்வ வயது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிற்து.
இன்றைய நாகரீக உலகில் பெண்கள் கல்வியை சிறப்பாக கற்று கொள்ளவும், உயர் பதவிகளுக்கு செல்லவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 1950 ல் சுதந்திரம் மற்றும் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, குழந்தை திருமணச் சட்ட பிரிவி பல திருத்தங்களுக்கு செய்யப்பட்டது. அதன்படி, திருமணத்திற்கான குறைந்தபட்ச சட்ட வயது, 1978 முதல், பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் இருந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “1929 ஆம் ஆண்டின் முந்தைய ஷார்தா சட்டத்தை திருத்துவதன் மூலம் 1978 ஆம் ஆண்டில் பெண்களின் திருமண வயது 15 ஆண்டுகளில் இருந்து 18 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இந்தியா மேலும் முன்னேறும்போது, பெண்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் தொடர வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், தாய்மைக்குள் நுழையும் ஒரு பெண்ணின் வயது பற்றிய முழு பிரச்சினையும் திருமணம் செய்யும் போது பார்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும், இதற்கான பரிந்துரைகளை செய்ய குழுவை நியமிக்க வேண்டுமென்று தான் முன்மொழிவதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (WCD) இந்த அமைப்பு இப்போது அமைக்கப்பட்டது இது பெண்களின் திருமண வயது 18 முதல் 21 வரை உயர்த்தலாமா என்று ஆராய்ந்து வருகிறது