இஸ்லாமாபாத்: ‘
‘அணு ஆயுத ஆற்றல் பெற்ற பாகிஸ்தான், இந்திய தலைநகர் டில்லியை, ஐந்து நிமிடங்களில் தாக்க முடியும்,” என, பாக்., அணுசக்தி திட்டத்தின் தந்தையாக கருதப்படும், ஏ.கியு.கான், (வயது 80) தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அணு ஆயுத சோதனை நடந்து, 18 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், இஸ்லாமாபாத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏ.கியூ. கான் பேசியதாவது:

கான்
கான்

“பாகிஸ்தான், 1998ல், அணு ஆயுத வல்லமை பெற்றது. 1984ம் ஆண்டிலேயே, இத்திறனை பெற்றிருக்க முடியும். பாகிஸ்தான்  அணு ஆயுதம் தயாரித்தால், சர்வதேச நாடுகள், ராணுவ ரீதியில் தலையிடும் என்றும், உதவிகளை நிறுத்தக்கூடும் என்றும், அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக் பயந்தார். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், 1984ல், அணு ஆயுத திட்டத்தை  நிறைவேற்ற முடியவில்லை.
ஆனால் அதன் பிறகு அணுஆயுத வல்லமையை பெற்றோம்.
தற்போது இந்திய தலைநகர் டில்லியை  பாகிஸ்தானின், ராவல்பிண்டி அருகிலிருந்து, ஐந்து நிமிடத்தில் தாக்குதல் நடத்தும் வல்லமையை பாகிஸ்தான்  பெற்றுள்ளது” என்று கான் பேசினார்.