சென்னை
தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொறியியல் படிப்பு படிக்க மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. பொறியியல் பட்டதாரிகளில் பலர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாலும் மாநிலத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வருடம் அதிக அளவில் பட்டதாரிகள் வெளி வருவதும் காரணமாக சொல்லப்படுகிறது.
இன்ற் அண்ணா பலகலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஒரு செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர்,
“இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும் 35 கல்லூரிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது.
நாங்கள் இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களைப் பெற்றிருக்கிறோம்.
இந்த கல்லூரிகளில் தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆய்வில் எங்களுக்குத் திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும்.”
என்று கூறி உள்ளார்.