வுகான்
கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு அந்த வைரஸ் நகர் முழுவதையும் பாதித்து நாடு முழுவதும் பரவி தற்போது பல உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கோரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்பட்ட வுகான் நக்ர்ம் 76 நாட்களுக்கு முழுமையாக மூடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதன் பிறகு ஒரு மாதத்துக்கு யாருக்கும் கொரொனா பாதிப்பு ஏற்படவில்லை இந்த மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் ஒரே குடியிருப்பைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது எனவே இரண்டாம் கட்ட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்த சீனா அந்நகரத்தில் உள்ள 1 கோடி மக்களையும் பரிசோதனை செய்ய முடிவு எடுத்தது.
அதையொட்டி கடந்த 12 நாட்களில் 6.68 லட்சம் பேருக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வுகானில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இந்த கட்டாய பரிசோதனைக்கு முன்னரே பரிசோதனையில் உட்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைகளில் 206 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதியாகி உள்ளது.