சென்னை:
தமிழக காவல்துறையில் ஐபிஎல் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பேன் என்று டிஜிபி. டி.கே.ராஜேந்திரனுக்கு மாநகர போக்குவரத்து ஊழல் கண்காணிப்பு டிஜிபி ஜாங்கிட் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் ஐபிஎல் அதிகாரிகளை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் அல்லாத அதிகாரிகளை உயர்பதவியில் நியமிக்கப்படுவதாக குற்றப்பட்டு வரும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தின்போது பாண்டியராஜன் போன்ற காவலர்களை குறிப்பிட்டும் ஏற்கனவே ஜாங்கிட் புகார் அளித்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற 30 அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
தமிழக காவல் துறையில் யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகும் ஐபிஎஸ் அதிகாரிகளும், குரூப் தேர்வுகள் மூலம் தேர்வாகும் டிபிஎஸ் (TPS) எனும் அதிகாரிகளும் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
15 எஸ்.பி.க்கள் 8 துணை ஆணையர்கள் என 23 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குரிய பதவிகளை வகிப்பதாகவும், அதே நேரத்தில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பல துடிப்பான இளம் அதிகாரிகள் சரியான வாய்ப்பு பெறாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசின் தேவைகளுக்கேற்ப ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளை நியமித்தாலும் 3 மாதங்களுக்கு மேல் பணியில் தொடர மத்திய உள்துறை அமைச்சக அனுமதி பெற வேண்டும் என்ற விதியையும் ஜாங்கிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விதிமுறைகள் 8, 9 பிரிவுகளின்படி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வித முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருப்பதாகவும், 36 டிபிஎஸ் அதிகாரிகள் அந்த இடங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் கூட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் கூட்டி இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தமது கடிதத்தில் ஜாங்கிட் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]