டில்லி
இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தின் 32 ஆவது கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலை ஒட்டி பல முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
கூட்டம் முடிந்ததும் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம், “இன்றைய கூட்டத்தில் நடுத்தர மற்றும் சிறுதொழில் நடத்துவோருக்கு நன்மை தரும் பல திட்டங்கள் இயற்றப்பட்ட்ள்ளன. இவை வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளன.
1. ஜி எஸ் டிக்கான அதிக பட்ச தொகை ஒருங்கிணைப்பின் கீழ் ரூ. 1 கோடியாக இருந்தது தற்போது 1.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும் மேலும் ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு அளித்தால் போதும். இந்த திட்டத்தின் கீழ் இனி சேவை நிறுவனங்களும் இணைக்கப்ப்டும்.
2. சேவை நிறுவனங்களுக்கான வரி 6% ஆக்கப்படுகிறது.
3. அத்துடன் சேவை நிறுவனங்களுக்கான உச்சபட்ச தொகை ரூ.50 லட்சம் ஆக்கப்படுகிறது.
4. அத்துடன் இனி பெரிய மாநிலங்களுக்கு ரூ. 40 லட்சம் வரையும் சிறிய மாநிலங்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெள்ள நிவாரணத்துக்காக 1% கூடுதல் வரி விதிக்க அனுமதி வழங்கப்படுகிறது”
என தெரிவித்துள்ளார்.