பரிமலை

பரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாஸ்ட்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்படுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட உள்ளது.  இந்த சீசனில் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருவது வழக்கமாகும்.   அதில் பெரும்பாலானோர் சொந்த மற்றும் வாடகை வாகனங்கலில் கோவிலுக்கு வருவார்கள்

இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். நிலக்கல் பார்க்கிங் மையம் ‘பாஸ்டேக்’ உடன் இணைக்கப்பட உள்ளது.

ஐசிஐசிஐ வங்கிக்கு  ‘பாஸ்ட்டேக்’ மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 10-ந்தேதி நிலக்கல்லில் இதற்கான டோல்கேட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான நேரமும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.