சென்னை:
ஜெயா டிவியில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர், பெங்களூரு உள்பட பல இடங்களில் சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் 14 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இதில், ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1,800 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ஜெயா டிவியில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. எனினும், தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel