தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு தொடர்பாக தென் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மக்கள் தொகை விகிதாசாரப்படி தொகுதி மறுசீரமைக்கப்படும் என்று பாஜக-வினர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், மத்திய அரசு அதற்கான களப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றம் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அமர தேவையான இருக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசிவருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் அது தமிழ்நாட்டை பாதிக்கும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டியிருந்தார்.

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறித்து தென் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.