சென்னை:
டுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சிலர், இதை தவறாக பயன்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது, தங்களுடைய ஆதார் எண்ணை மட்டும் பகிர்ந்துவிட்டு தடுப்பூசி போட்டு கொள்ளாததும், போட்டது போல் சான்றிதழ் பெறுவதாகவும் தெரிகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட துணை சுகாதார இயக்குனர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் கள பணியாளர்கள் ஈடுபடாமல் இருப்பதையும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகார்களை கண்காணிக்க, மாவட்டந்தோறும் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார துறை உதவி இயக்குனர்கள் அல்லது புள்ளியியல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.