ஸ்லாமாபாத்

ர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ. 8670 கோடி விடுவித்துள்ளது.

கடந்த ஆண்டு  கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட  நிலையில், நேற்று சர்வதேச நாணய நிதியம் 2-வது தவணையாக 102 கோடி டாலர் (ரூ.8 ஆயிரத்து 670 கோடி) விடுவித்தது. இதனால், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன், 212 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்

சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்துள்ளது