மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களை இயக்கியவர், வினயன், காசி என்ற வித்தியாசமான படத்தை இயக்கி விக்ரமுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படத்தை இயக்கியவர் இவர்தான்.
தற்போது ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதை நாயகியாக, நியா நடிக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்தவள் நான். செவிலியர் பணி மீது உள்ள மதிப்பால். நர்சிங் படிப்பை முடித்தேன். ஆனால் மாடலிங் மீதுள்ள ஆர்வத்தால் அத்துறையில் நுழைந்தேன். அதைத் தொடர்ந்து இப்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.

அறிமுகமாகும் முதல் படமே ரசிகர்களை கவரும் பீரியட் படமாக.. அதுவும் பெரிய இயக்குநரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்தான” என்கிறார்.

மேலும், “தற்போது பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் ஜோடியாக இன்னொரு மலையாள படத்திலும் நடிக்கிறேன். இரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கின்றன” என்று உற்சாகமாகச் சொல்கிறார் நியா.
[youtube-feed feed=1]