தான் முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை, வேறு யாரையாவது கொண்டுவரவும் செய்யலாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல் தெரிவித்ததாவது:
“நான் முதல்வர் ஆவேன் என்று சொல்லவில்லை. மற்றவர்கள்தான் சொல்கிறார்கள். “முள் கிரீடம்” என்று நான் சொன்னதும், ராஜா என நினைத்துவிட்டார்கள். ஆட்சி என்பது ஒருவர் தலையில் போடப்படும் முட்கிரீடம் என்பதல்ல. நிர்வகிக்கும் அனைவருக்கும் அது முட்கிரீடம்தான்.
கட்சி ஆரம்பிக்கிறேன் என்றால் முதலமைச்சராக வரவேண்டும் என்று அர்த்தம் அல்ல. மற்றவரை யமிக்கலாம்.. செய்து கொடுத்துவிட்டு நாந் ஒதுங்கிப்போறதுக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று கமல் தெரிவித்தார்.
இதையடுத்து, தான் கிங் (ராஜா) ஆக விரும்பவில்லை என்பதையும் கிங் மேக்கராக இருக்க விரும்புவதையும் கமல் வெளிப்படுத்தியுள்ளார்.