நெட்டிசன்

நேசமிகு ராஜகுமாரன் அவர்களின் முகநூல் பதிவு:

னநாயக நாடு என்றுசொல்லிக்கொள்கிறோம்  ஆனால் பல விதங்களில் அரசாட்சி போலத்தானே நடந்துகொண்டிருக்கிறது? குறிப்பாக,  தான் உயிரோடு இருக்கும்வரை, பதவியில் இருப்பதையே அரசியல்வாதிகள் விரும்புவர்.

படத்தில் இருப்பவரை பாருங்கள். இவரது பெயர், அகரம் சுப்பராயலு ரெட்டியார். ஆங்கிலேய ஆட்சியில், மாண்டேகு சீர்திருத்த சட்டம் ஏற்படுத்தப்பட்டது அல்லவா?  அதன்படி, 1920- ல்  பிரிட்டிஷ் + இந்தியா இரட்டை நிர்வாக ஆட்சிக்கான- சென்னை மாகாண தேர்தலில் ஜெயித்த நீதிக்கட்சியின் முதல் முதல்வர், இவர்.

தியாகராய செட்டியார்தான்,  முதல்வர் பதவிக்கு ஆங்கிலேயரால் அழைக்கப்பட்டார் .அவர் அதை மறுத்து தனது கல்லூரி தோழரான இவரைப் பரிந்துரைத்தார் .

பதவி ஏற்ற சில மாதங்களிலேயே சுப்பராயலு ரெட்டியார்  உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக பதவியை ராஜினாமா செய்தார் .

“முதல்வர் பதவி என்பது கடுமையாக உழைக்க வேண்டிய மக்கள் பணி. உடல் நலம் நன்றாக இருந்தால்தான் சிறப்பாக பணிபுரியமுடியும் ஆகவே பதவி விலகுகிறேன்” என்றார் இவர்.

ஹூம்… எப்படி இருந்த முதல்வர் பதவி!?