சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் September 1, 2023, 10:58 am SHARE 0FacebookTwitterPinterestEmail சென்னை: எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அமர்வு நீதிமன்றம் மாற்றியது. சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைடுத்து 2வது சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

2006-11-ம் ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவருடைய மகன் கௌதம சிகாமணி. இவர் 2008-ம் ஆண்டு 41,57,225 ரூபாய் மதிப்பீட்டில் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார். அதே போல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் 22 லட்ச ரூபாய் முதலீடும் செய்தார்.

இந்த பணப் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு அமலாக்க பிரிவு பெமா சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்தது.

இந்த நிலையில் கௌதம சிகாமணி, ஐக்கிய அரபு குடியரசில் உள்ள யுனிவர்ஸ் நிறுவனத்தின் மூலம் 7,05,57,237 கோடி ரூபாயை 2008-2009ம் ஆண்டு முதல் 2012-13ம் ஆண்டு காலம் வரை லாபத்தொகையை ஈட்டியுள்ளார். இது ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பானது என்று அமலாக்க பிரிவு குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு அமலாக்க பிரிவு விசாரணையிலிருந்து வந்த நிலையில் தற்போது அமலாக்க பிரிவு இந்த வழக்கில் மேல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக அவருடைய விவசாய நிலங்கள், மற்றும் வணிக வளாகங்கள், மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை அமலாக்கப் பிரிவினர் ‘பெமா’ சட்டத்தின் கீழ் முடக்கி உத்தரவிட்டுள்ளனர். அமலாக்க பிரிவின் இந்த நடவடிக்கை தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து இப்போது கௌதம சிகாமணியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. இந்த வழக்கு பல காலமாக அமலாக்க பிரிவில் கிடப்பில் கிடந்தது. இப்போது இதற்கு உயிருட்டப்படுள்ளது.

இந்த நிலையில், கவுதம சிகாமணி மீதான வழக்கை, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே திமுக எம்.பி.க்கள், ராஜா, கனிமொழி மீதான  2ஜி வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்,  திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளும் தூசி தட்டப்பட்டு விசாரணைக்கு வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே  கடந்த சில  மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் தொகுதியின்  திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜகத்ரட்சகனின் சொத்துக்களைபெமா சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கி  நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலும் ஒரு திமுக எம்.பி. மீதான நடவடிக்கையும் இறுக தொடங்கி உள்ளது.