புதுச்சேரி:
மிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள்இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் திருட்டுத்தனமாக மதுபானம்விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, சுமார் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு மே 17ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகம், ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் மதுக்கடைகள் 4ந்தேதியே திறக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், தமிழகஅரசும், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை இன்றுமுதல் திறந்துள்ளது. ஆனால், புதுச்சேரியில் இன்னும் மதுபானக்கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பான கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது, சுமார் 100 கடைகளில் சரக்குகள் காலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தற்காலிகமாக 100 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுஉள்ளதாகவும், 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கட்சி தலைவர் அன்பழகன் புகாரின் பேரில் கவர்னர் கிரண்பேடி, மதுக்கடைகளில் சோதனை நடத்தி,  இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புதுசேரி அரசு மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.