ரவுண்ட்ஸ் பாய்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், “தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர்” என்று தவறாக, “கவிஞர்” சிநேகன் சொல்லப்போக, “தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் மனேன்மணீயம் சுந்தரனார் என்பது கூட தெரியவில்லையே இந்த கவிஞருக்கு! இவர் தமிழில் திரைப்பாடல்கள் வேறு எழுதுகிறாரே..” என்று நெட்டிசன்கள் பலர் ஆதங்கப்படுகிறார்கள்.

சிநேகனுக்கு “கவிஞர்” ஆவது மட்டுமல்ல… திரைப்பட நடிகர் ஆக வேண்டும் என்ற ஆசையும் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டி ருந்தது. அதன் வெளிப்பாடுதான் “420” என்ற படத்தில் நடித்தார்.

அதேபோல, “எம்.பி., அமைச்சர் ஆகவேண்டும்” என்ற ஆசையும் அவருக்கு உண்டு.

(இவர் அ.தி.மு.க. உறுப்பினர்.)

கடந்த வருடம் அக்டோபர் மாதம், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதை அவரே வெளிப்படுத்தி இருக்கிறார்.

“நான் தீவிர அரசியலில் இருந்திருந்தால்.. அதாவது அ.தி.மு.க.வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாக ஒரு அமைச்சராகியிருப்பேன்

இணைந்து குறைந்தபட்சம் ஒரு எம்பியாகியிருப்பேன், மந்திரியாகியிருப்பேன், அதற்குரிய அத்தனை தகுதிகளும் எனக்கிருந்தது, அத்தனை வாய்ப்புகளும் தட்டியது” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

ஹூம்.. ஒரு அமைச்சரை, எம்.பி.யை இழந்துவிட்டோமே!