நடிகை இலியானாவும் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்ட்ரூ நீபோனும் பிரிவு என தகவல்கள் சமீபத்தில் வெளியாயின.
இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து இருக்கும் பல புகைப்படங்களை இருவருமே நீக்கியுள்ளனர்.இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன் புதிய படத்திலும் நடிக்க கமிட்டகியிருக்கிறார் இலியானா,
இந்த நேரத்தில் தான் இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன.அதை உறுதிப்படுத்தும்வகையில், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார் இலியானா.
அதில், வாழ்க்கையில் நீங்கள் குடும்பத்தினர் மற்றும் பார்ட்னரை இழக்கலாம். ஆனால் உங்களை மட்டும் இழந்து விடாதீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்கள் நேசிக்காதபோது உங்களை நீங்களே நேசித்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.