அண்ணாத்த திரைப்படத்திற்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 169 படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
இந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அடுத்த மாதம் சென்னையில் ‘ராக் வித் ராஜா’ என்ற பெயரில் பிரம்மாண்ட இசைக்கச்சேரி நடத்த இளையராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடன் தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இளையாராஜா “என்றும் என்றென்றும் ரஜினிகாந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள ரசிகர்கள் ரஜினிகாந்த்துடன் இளையராஜா இணையப்போகிறாரா ? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
என்றும் என்றென்றும்! @rajinikanth pic.twitter.com/yN3IfhTEh5
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 15, 2022
1994 ல் வெளியான ரஜினியின் வீரா திரைப்படத்திற்குப் பின் ரஜினி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை என்ற நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினியின் 169 படத்திற்கு அனிருத் இசைமைக்கப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ‘அரபிக் குத்து’ பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]