கோவை

ரும்  17 ஆம் தேதி கோவையில் நடக்க இருந்த இளையராஜா இசைக் கச்சேரி ஜூன் 7 க்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இசைஞானி இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.

கோவையில் வருகிற 17ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும்நிலையில், இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது.

இளையராஜா நாடு தற்போது இருக்கும் பதற்றமான சூழ்நிலையில் இசை நிகழ்ச்சியை வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் தள்ளி வைத்துள்ளதாக விளக்கம் கொடுத்திருந்தார்.

இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை புதூரில் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த இசைக் கச்சேரி, ஜூன் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ம்