இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நியமன உறுப்பினராக இளையராஜா தேர்ந்துக்கப்பட்டதாக ஜூலை 6 ம் தேதி அறிவிப்பு வெளியானது.
நாடாளுமன்றம் கடந்த வாரம் கூடிய நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளையராஜா இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
‘கடவுள் மீது ஆணையாக’ என்று குறிப்பிட்டு பதவி ஏற்றுக்கொண்ட இளையராஜா தமிழில் பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel