சென்னை: மணிப்பூர் ஆளுநரும், மேற்குவங்க பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்பட அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இல.கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் (சதாபிஷகே விழா) இன்று சென்னையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது கலந்துகொள்ள சென்னை வந்திருந்த மேற்கு வங்க முதல்வர் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதுடன், இன்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அவருக்கு வரவேற்பு அளித்த சென்டைமேள இசை கலைஞர்களுடன் இணைந்து செண்டை மேளம் இசைத்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட முக்கிய பாஜக தலைவர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.