புதுடெல்லி:
மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் 2-வது இடத்திலும்,டெல்லி ஐஐடி 3-ம் இடத்திலும் உள்ளன.
செயின்ட் ஸ்டீபன் கல்லூரி 4-வது இடத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 7-வது இடத்திலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 10-வது இடத்திலும் உள்ளன.
5,6,8,9 ஆகிய இடங்களை நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஐஐடிகளே பிடித்துள்ளன.
தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை கடந்த 2016- ஆண்டு முதல் மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.