சென்னை
இன்று தமிழக தலைமை செயலாளர் முருகானந்தத்தை இந்திய அயலகப் ப்ணி அலுவல்ர்கள் சந்தித்துள்ள்\ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”இந்திய ஆட்சிப் பணிகள் பிரிவின் ஒன்று இந்திய அயலகப் பணி (IFS) இப்பிரிவு சார்ந்த அலுவலர்கள் கோபில்லா கிருஷ்ணா ஶ்ரீவத்சவ், ஜி.கிருஷ்ணகுமார், பி.அனுஜா, ஜி.சத்யநந்தி, ஜி.ஹரிசங்கர், பி.வி. அப்துல் பசல், கோகுல் கிருஷ்ணா முதலானோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்தை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.
தமிழகம் இந்திய அளவில் பொருளதாரத்தில் சிறந்த இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. தொழில் வளர்ச்சியிலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த மாநிலமாகவும் விளங்குகிறது. தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை விளக்கிடும் கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் எனப் பல்வேறு பெருமைக்குரிய சின்னங்கள் தமிழகத்தில் நிறைந்துள்ளன.
பண்பாட்டுப் பெருமைகளை விளக்கும் மாமல்லபுரம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம், அய்யன் திருவள்ளுவர் சிலை, தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் முதலான சுற்றுலாத் தளங்கள் பல தமிழகம் முழுவதிலும் அமைந்துள்ளன.
தமிழகத்தில் ஒரு வாரம் தங்கி இவை அனைத்தையும் கண்டு ஆய்வுகள் செய்து மகிழ்ந்திட, இந்திய அயலகப் பணி அலுவலர்கள் 7 பேர் அடங்கிய குழு தமிழ்நாடு வந்துள்ளது. அக்குழு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்தை சந்தித்து பேசினர். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பி. அமுதா, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
என்று கூறப்பட்டுள்ளது.