மும்பை: சிவில் நீதிபதி தேர்வில் இருந்து விலக்கிவைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக வந்த வழக்கு ஒன்றை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதியரசர்கள் எஸ்.சி.தர்மாதிகாரி, மற்றும் ஷாலினி ஃபன்சால்கர் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது சட்டப்படிப்பில் மிகுந்த நன் மதிப்பெண்கள் பெற்றவர். ஆனால் அவரது தனது சட்டப் படிப்புக்கான தேர்வு ஒன்றில் இரண்டாவது முயற்சியில் பாஸ் செய்ததை கண்டறிந்த தேர்வு கமிட்டி அவரது பெயரை சிவில் நீதிபதி தேர்வில் இருந்து விலக்கி வைத்தது.
மனுதாரர் தனது சட்டப்படிப்பில் தனித்திறமை சம்பந்தப்பட்ட சில முயற்சிகள் காரணமாக ஒரு குறிப்பிட்ட தேர்வை எழுதாமல் விட்டிருந்திருக்கிறார். ஆனால் தங்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து தேர்வுகளையும் முடிப்பவர்களே நீதிபதி பணிக்கான தேர்வில் தகுதியுடையவர்களாக கருதப்படுவார் என்று தீர்ப்பளித்தது.