அகிலேஷுக்கு பெருகும் ஆதரவு: முலாயமுக்கு பின்னடைவு

Must read

உத்திர பிரதேசத்தின் தேர்தல் களமும் சமாஜ்வாடிக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குடும்ப சண்டையும் ஒருசேர சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவை விட அவரது மகனும் மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு மக்கள் ஆதரவு மிக அதிகமாக இருப்பதாகவும், கட்சிக்கு இருந்த “ரவுடிகளின் கட்சி” என்ற பிம்பத்தை உடைத்துவிட்டார் அகிலேஷ் என்று பலரும் கருதுவதாகவும் ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

akhilesh_mulayam

சி-வோட்டர் என்ற அமைப்பு, உ.பியின் 403 தொகுதிகளில் சுமார் 12,221 பேரிடம் எடுத்த கருத்து கணிப்பில் 75.7% மக்கள் அகிலேஷ் மீண்டும் முதல்வராக வேண்டும், எங்களுக்கு முலாயம் வேண்டாம் என்று கருத்து கூறியுள்ளனர். இளைஞர்கள் மற்றும் படித்த மக்களிடையே அகிலேஷுக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும், 89.4% அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அகிலேஷை விரும்புவதாகவும் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. படிக்காத மக்களிடையே இன்னும் முலாயமுக்கே ஆதரவு இருக்கிறது.
அகிலேஷின் பரம வைரியான அவரது சித்தப்பா ஷிவ்பாலுக்கு வெறும் 6.1% ஆதரவே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவ் நேர்மையானவர் மற்றும் கட்சியில்”குண்டாஸ்” இமேஜை நீக்க முயல்பவர் என்று சுமார் 68% பேர் கருதுகின்றனர் என்று அக்கருத்து கணிப்பு கூறுகிறது.

More articles

Latest article