
சென்னை:
தூத்துக்குடி மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனே பதவி விலக வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர்ல கொல்லப்பட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி பகுதியில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என எச்சரித்துள்ளார்.
[youtube-feed feed=1]