சென்னை:

பாரதியஜனதா ஆட்சி என்றாலே மக்களுக்கு  பணமதிப்பிழப்பால்  பட்ட அவதியும்,   ஜிஎஸ்டியும் நினைவுக்கு வரும் என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்,  காங்கிரஸ் கட்சி சொல்வதை நிறைவேற்றும் என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள 25 கோடி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உள்ளது. அதில் முக்கியமாக,  ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை அறிவித்து உள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

அதுபோல,, இளம் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் நிறுவனங்கள் குறித்து பதிவு செய்ய தேவையில்லை என்றும், ஏஞ்ல் வரி ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து தொழில் வளர்ச்சியை பெருக்க ஆவன செய்துள்ளது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்த ப.சிதம்பரம், பல்வேறு கேள்வி களுக்கு விளக்கமாகவும், தெளிவாகவும்  பதில் கூறினார்.

அப்போது,   ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் மற்ற திட்டங்கள் பாதிப்படையாது என்று கூறியவர், பாஜக அரசு கடந்த 2014ம்ஆண்டு தேர்தலின்போது,  ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 இலட்சம் போடுவதாக கூறியது… ஆனால், கொடுத்த வாக்குறுதியை பாஜக  நிறைவேற்ற வில்லை என்றார்.

நியாய் திட்டம் கண்டிப்பாக நாடு முழுவதும் உள்ள  5 கோடி ஏழை குடும்பங்களை சென்றடையும் என்று கூறியவர்,

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்தது. நியாய் திட்டம்  (குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதத் திட்டம்) ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்,  நிறைவேற்ற முடியாத திட்டத்தை என்றும் காங்கிரஸ் ஒருபோதும் அறிவித்தது இல்லை என்றும் உறுதிபட தெரிவித்தார்.

ஏற்கனவே நாங்கள் அறிவித்த கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் குறித்தும் பாஜகவினர் இதுபோலவே கூறினார்கள்… ஆனால், அதை நாங்கள் கொண்டு செயல்படுத்தி காட்டியதையும் நினைவு கூர்ந்தார்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் வறுமையை ஒழிப்பது நியாய திட்டம் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்றும் உறுதியளித்தார்.

பாரதிய ஜனதா என்று கூறினாலே  மக்களுக்கு நினைவுக்கு வருவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை யும், ஜிஎஸ்டி வரி போடப்பட்டதுதான் என்று கூறியவர்,  இதன் காரணமாக நாட்டில் ஏற்பட்ட வேலையில்லா திண்டாடமும்தான் ஞாபகத்துக்கு  வரும் என்றார்.

இந்திய மக்கள் அச்சம் இல்லாத மனதோடு வாழ வேண்டும் என்றால்,  அதற்கு பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம்  கூறினார்.