சென்னை:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதித்தால் ‘திருச்சி’ தொகுதியில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்  திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  தேர்தல் பிரசாரக்குழு  கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,  9 தொகுதிகளில்  காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு விருப்ப மனு வாங்கப்படும் என்றும், பின்னர் அதுகுறித்து  15 பேர் கொண்ட மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர்  ஆய்வு செய்து, ஒரு பட்டியல் தயார் செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள்.

அதை டெல்லியில் உள்ள தேர்தல் குழு ஆய்வு செய்து  மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பரிந்துரைத்தவர்களை பார்த்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்வார்கள் என்று கூறினார்.

திருச்சி தொகுதியில் போட்டியிடும்படி எனது பெயரை  அறிவித்தால்,  நான் போட்டியிடுவேன் என்றவர், நான் தேர்தலில் போட்யிட விரும்புகிறேன் என்றவர், அதற்காக விருப்ப மனு தாக்கல் செய்வேன் என்றும் கூறியவர்,ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன் என்று தெரிவித்தார்.