சென்னை
தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ள எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் எங்கும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு க ஸ்டாலின் தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அனைத்து இல்லங்களிலும் கருப்புக் கொடி அமைத்து பிரதமர் வரும் போது எதிர்ப்பை காட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு பதில் அளித்துள்ளார். அவர், “தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டப்போவதாக கூறி உள்ளன. அவர்கள் கருப்புக் கொடி காட்டினால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம். நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து எங்கள் உரிமையைப் பெறுவோம். பிரதமருக்கு தேவையான நேரத்தில் காவிரி நீரைப் பெற உரிய அழுத்தம் அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.