சிவகங்கை:
ஒரே கட்சி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கண்ணக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதில் பங்கேற்று பேசினார்.
அப்போதும், ஒரே கட்சி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் எதிர்காலம் காங்கிரஸ் கட்சியை நம்பியே இருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தமால் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.
தமிழகத்தில், முதலமைச்சர், துணை தலைவர் இருவரும் அரசு பணத்திலேயே விளம்பரம் செய்து வருகின்றனர். எப்போது கவிழும் நிலையில், கடும் போராட்டங்களுக்கு இடையே அதிமுக 5 ஆண்டுகளை கடத்தி விட்டது. ஏழைகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசு ஆட்சி செய்ய தகுதி அற்ற அரசாக மாறி விட்டது. இந்த அரசின் எதிர்காலம் என்ன என்பது இன்னும் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக மக்கள் அளிக்கும் முடிவில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.