சென்னை:

நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு திரும்ப வேண்டும்.
நாளை பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்.

நாளைக்கு பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக கருதப்பட்டு, ஜனவரி 28-ம் தேதிக்குப் பிறகு தற்காலி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.