சென்னை
முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தாம் எடியூரப்பாவாக இருந்தால் பதவி ஏற்றிருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டார். பெரும்பான்மை இல்லாமலேயே அவர் முதல்வர் பதவி ஏற்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்து ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் என விமர்சித்துள்ளர்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் எடியூரப்பாவாக இருந்திருந்தால் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு 18ஆம் தேதி வரும் வரை பதவி ஏற்றிருக்க மாட்டேன். எடியூரப்பாவின் கடிதத்தில் அவர் 104 என்பதை விட அதிக எண்ணிக்கை எதையும் குறிப்பிடவில்லை; கவர்னரும் தனது அழைப்பில் அதை குறிப்பிடவில்லை.
எடியூரப்பா தனது பெரும்பான்மையை இன்னும் 15 நாட்களில் தயாரிக்க வேண்டும் என ஆளுநர் கூறி உள்ளார். அதாவது ஆளுநர் எடியூரப்பாவுக்கு 104 என்னும் எண்ணிக்கையை 111 ஆக மாற்றா 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்” என பதிந்துள்ளார்.