
சென்னை,
தமிழக அரசு டெங்குவை கட்டுப்படுத்திருந்தால் உயிரிழப்பு ஏன் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுகரசர் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த ஊழலை நாட்டு மக்களுக்கு தோலுரித்துக் காட்டி, கண்டிக்கிற வகையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்திய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திருநாவுக்கரசர் அமித்ஷா மகனின் ஊழல் குறித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது,
தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.
தமிழக அரசு டெங்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு சரியானபடி நடவடிக்கை எடுத்திருந்தால், டெங்கு உயிரிழப்பு குறைந்திருக்கும், ஏன் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
[youtube-feed feed=1]