நெட்டிசன்:

மூத்தபத்திரிகையாளர்: தராசு Shyam 

லைமை நீதிபதி எஸ் கபாடியா நீதிபதிகள் கே எஸ் ராதாகிருஷ்ணன், சுதந்திர குமார் அமர்வு 6.8.2010ல் 36/2009l வகுத்து அளித்த நெறிமுறைகள் இந்தியா முழுவதும் பொருந்தும்.

ஆழ்துளை கிணறுகள் தோண்டுவது முதல் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை விரிவான கட்டளைகள் தீர்ப்பில் தரப்பட்டுள்ளன.

குறிப்பாக தண்ணீர் எடுக்க முடியாமல் கைவிடப்படும் குழாய் கிணறுகளை எப்படி அடிமட்டத்தில் இருந்து பூமி வரை மூட வேண்டும் என்றும் அதற்கு யார் யார் பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

கிராமங்களில் கைவிடப்பட்ட கிணறுகளில் கிணறுகளை மூடும் பொறுப்பு மற்றும் அவற்றுக்கான கணக்கு யாரிடம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

நகரப் பகுதிகளுக்கும் நீதிபதிகள் இந்த கட்டளைகளை விரிவாக்கம் செய்துள்ளார்கள்.

சுப்ரீம் கோர்ட் வகுத்தளித்த வழிகாட்டும் நெறிமுறைகளை ஒழுங்காக பின்பற்றி இருந்தால் மணப்பாறை சோகம் ஏற்பட்டிருக்காது.