பெங்களூரு,

18 ஆண்டுகளாக விசாரணை இழுத்தடிக்கப்பட்டு 21 வருடத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கும்  சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூர் கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை   உச்ச நீதி மன்றம் உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பரன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர் செலுத்த வேண்டிய ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 13 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாலா தற்போது சென்னை சிறைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பரப்பன அக்ரஹார ஜெயில் சூப்பிரடண்ட்  கிருஷ்ணகுமார் கூறியதாவது,

கடந்த 14ந்தேதி சுப்ரீம் கோட்டு தீர்ப்பையடுத்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் சசிகலா இன்னும் 3 ஆண்டுகள் 11 மாதம் ஜெயிலில் இருக்க வேண்டும் என்றார். 4 ஆண்டு சிறையில், ஏற்கனவே 2014ம் ஆண்டு பெங்களூரு விசாரணை நீதி மன்றம் தீர்ப்பளித்தபோது,  21 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதுபோக மீதமுள்ள நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும்,

குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் ஒரேவிதமாகத்தான் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு எந்தவித தனிச்சலுகையும் கிடையாது என்றும் கூறினார்.

பாதுகாப்பு கருதி, சசிகலாவும், இளவரசியும் பெண்கள் சிறையில் உள்ள சிறிய செல்லில் அடைக்கப்பட்டுள்ளனர். சுதாகரன் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும்,  கைதிகளுக்கு ஜெயிலில் தயாராகும் உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.  கைதிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.