பேருந்துகள் ஓடினாலும் நஷ்டம் உடனே ஓடிவிடாது…
ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தமிழக அரசின் பேருந்துகள் இயங்கவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் 21 ஆயிரத்து 500 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை மூலம் நாளொன்றுக்கு 25 கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
இந்த வருமானத்தை ‘சாப்பிட்டு விட்டது’’ ஊரடங்கு.
இத்தனை நாட்கள் பஸ்கள் ஓடாததால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மாதம் தோறும் வழங்க வேண்டிய 340 கோடி ரூபாய் சம்பளத்தை உருட்டி புரட்டி வழங்கி வருகிறது.
பணம் தந்தது யார்?
மாணவர்களுக்கு பஸ் பாஸ் கொடுத்துள்ள தமிழக அரசு, அந்த மான்ய கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கி வருகிறது.
அந்த பணத்தில் இருந்தே ஊதியம் அளிக்கிறது, போக்குவரத்து கழகங்கள்.
இந்த இழப்பை ஈடுகட்டுவது சாதாரண காரியம் அல்ல.
மீண்டும் ஓரிரு நாட்களில் பஸ் போக்குவரத்து தொடங்கினாலும்,. சமூக இடைவெளி காரணத்துக்காக 50% பயணிகளுடன் தான் இயக்க வேண்டும் என்பதால், இரண்டு மாத நஷ்டத்தை ஈடுகட்ட மாதங்கள் பல பிடிக்கும்.