கொரோனா என்னும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதிலிருந்து தற்போதுவரை சுமார் 85 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 130கோடிக்கு மேலான மக்கள் தொகை உள்ள இந்தியாவில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை கண்டு, உலக நாடுகளே மூக்கில் விரலை வைத்துள்ளன.
குறைந்த அளவிலான மக்கள் தொகை உள்ள நாடுகளில்கூட இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில், ஆரம்ப கட்டத்தில் மெதுவாக தொடங்கிய தடுப்பூசி போடும் திட்டம், தற்போது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது, தினசரி லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், முக்கிய நாட்கள், சிறப்பு முகாம்கள் மூலம் கோடிக்கணக்கான பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணியில், உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா திகழ்வதற்கு முக்கிய காரணம், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினரின் தன்னலற்ற மற்ற சேவையே காரணம் என்றால் வியப்பேதுமில்லை.
தடுப்பூசி எடுத்துக்கொள்வதில், பொதுமக்களிடம் எழுந்துள்ள ஆர்வம், பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில், சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என பல தரப்பினரின் ஆதரவு மற்றும் சேவை மனப்பான்மை காரணமாக, இன்று தடுப்பூசி செலுத்துவதில், உலக நாடுகளுக்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சாலை பாதிக்கப்பட்டு, அதன்மேல் வெள்ள நீர் ஓடிய நிலையிலும், தடுப்பூசி செலுத்தும் பணிக்காக சென்ற பெண் மருத்துவர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், அந்த வெள்ளத் திலும், நடந்துசென்று, தங்களது கடமையை நிறைவேற்றுவதற்காக சென்றது தொர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 85 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 34 கோடியே 66 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 7 கோடியே 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு டோஸ் மருந்துகளையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
மக்கள் சேவையில் மருத்துவ நிபுணர்கள், மற்றும் மத்திய, மாநில அரசுகளின் துரித செயல்பாடுகளே, இந்தியா இன்று உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மக்கள் சேவையில் தன்னலமற்று சேவையாற்றும் இதுபோன்ற மருத்துவர்கள், மற்றும் சுகாதாரத்துறையினரின் சேவையை ஒவ்வோருவரும் பாராட்ட வேண்டியது நமது கடமை. அவர்களுக்கு தங்களது கைத்தட்டல்களை கொடுக்கலாமே…
இதுதான் இந்தியா….