download
காஞ்சிபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து சிறைக்குச் செல்வார்.   சசிகலாதான் முதல்வர் பொறுப்பை ஏற்பார் என்று கூறி புதிய பரபரப்பை சுப்பிரமணிய சுவாமி ஏற்படுத்தி உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் பா.ஜ.க சார்பில் போட்டியில் மனோகரனை ஆதரித்து சுப்பிரமணியன் சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ”ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது, அவருக்கு ஒரு ரூபாய்கூட சொத்து இல்லை. . ஆனால், தற்போது ரூ.120 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனு தாக்கலில் தெரிவித்து இருக்கிறார்.  இதனால், அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவது உறுதி. அவர் . முதல்வராக ஆக மாட்டார். சிறைக்குத்தான் செல்வார். சசிகலாதான் முதல்வர் ஆவார். ஆகவே , அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண்.
download (1)ஏழை, எளியவர்களுக்கு தேவையானது, அடிப்படை வசதிகள்தான். அதைவிடுத்து  மக்கள் வரிப்பணத்தில் இருந்து அதை செய்து கொடுக்காமல், டி.வி., ஸ்கூட்டர் என இலவசம் என்ற பெயரில்  வழங்குகிறார்கள். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம், அம்மா பள்ளிக்கூடம், அம்மா ஸ்கூட்டர் போன்று விரைவில் அம்மாவுக்கு ஜெயிலும் வரும். சசிகலா தேவர் சமுதாயத்தை பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.  தேவர் எனது சொத்து நாட்டுக்கு என்றார். ஆனால், சசிகலாவோ, நாட்டின் சொத்து எல்லாம் தனக்கு என கொள்ளையடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலியல் 1.76 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வினர் விரைவில் தண்டனை அனுபவிக்க இருக்கிறார்கள்
“ இவவாறு சுப்பிரமணிய சுவாமி பேசினார்.