சென்னை,

ழக்குகளில் வாதிடுவதற்கான வக்காலத்து மனுக்களை தாக்கல் செய்யும்போது வழக்கறிஞர்கள் தங்களது அடையாள அட்டையுடன் தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்டுடு உத்தரவிட்டு உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கில், அவருக்கு தெரியாமலேயே உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு அப்போது நீதிபதி வைத்தியநான் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, நீதிபதி வழக்கறிஞர்கள் தாங்கள் செய்யும் வழக்குகளுடன்,  தங்களது பதிவு எண், நிழற்படம் ஆகியவற்றுடன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதியின் உத்தரவுக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த உத்தரவை திரும்பப்பெற கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது .

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, போலி வழக்கறிஞர்களைக் கண்டறிந்து களைவதற்கான  ஆலோசனை களை வழக்கறிஞர்கள் சங்கம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார் .

மேலும், வழக்கறிஞர்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் வக்காலத்து மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் பார் கவுன்சிலில் விண்ணப்பித்து அடையாள அட்டைகளைப் பெற வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார் .

இந்த புதிய விதிமுறைகள் வரும்  நாளை முதல் ( ஜனவரி 2ம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது