டில்லி

மிக்ரான் வைரஸ் பாதிப்பை 2 மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை ஐ சி எம் ஆர் குழு வடிவமைத்துள்ளனர்.

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறிய தற்போதைய முறைப்படி ஒருவர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவு அறிய 3 நாட்கள் வரை ஆகலாம்.   இந்த முடிவை விரைவில் கண்டறிய ஐ சி எம் ஆர் ஆய்வுக் குழுவினர் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.  இந்த நவீன கருவி மூலம் ஒமிக்ரான் பாதிப்பை 2 மணி நேரம் மூலம் கண்டறிய முடியும் என குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த குழுவின் தலைவர் மருத்துவர் பிஸ்வஜோதி போர்கோகோட்டி செய்தியாளர்களிடம், ”ஐசிஎம்ஆர்- மற்றும் திப்ருகார்கில் உள்ள ஆர் எம் ஆர் சி இணைந்து, ஆர்சிபி சிஆர் கருவியுடன் இணைந்த புதிய பரிசோதனைக் கருவியைக் கண்டறிந்துள்ளோம். . இந்த கருவியின் மூலம் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை 2மணிநேரத்தில் தெரிந்துவிடும்.

வழக்கமாக மரபணு பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 36மணிநேரம் தேவைப்படும்.  அதுவே சில நேரங்களில் 4 முதல் 5 நாட்கள்வரைகூட ஆகலாம்., இந்த பரிசோதனைக் கருவி மூலம் 2 மணிநேரத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது தெரிந்து விடும்.”  எனத் தெரிவித்துள்ளார்.