டில்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி இந்திய மருத்துவ ஆய்வுக் குழு புதிய சோதனை முறைகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கடுமையாக ஆனதால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு சோதனை முறைகளைத் திருத்தி புதிய முறைகளை அறிவித்துள்ளது.  இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை விவரங்கள் பின் வருமாறு :

“கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பு சினாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து இனம் தெரியாத ஒரு நுண்ணுயிர் மூலம் ஒரு மூச்சு தொடர்பான நோய் பரவுவதாக அறிவித்தது.  அந்த நோய் சீனாவின் அண்டை மாகாணங்களில் வேகமாகப் பரவி தற்போது 182 உலக நாடுகளில் பரவி உளது.  இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகள் இருமும் போதும் தும்மும் போதும் விழும் வைரச் மூலமாக இது பலருக்கும் பரவி வருவதாகக் கூறப்பட்டது.

தற்போது இந்தியாவில் அந்த கோவிட் 19 என அழைக்கப்படும் தொற்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடம் தொடர்பு கொள்வதன் மூலம் உடனடியாக அதிக அளவில் பரவுகிறது.  சமுதாய அளவில் இந்த தொற்று ஏற்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.   இது குறித்து கண்டறியப்பட்டால் சோதனை  முறைகளில் மேலும் மாறுதல் ஏற்படலாம்.

தற்போதுள்ள நிலையில் இந்த கொரோனா சோதனை குறித்துக் கடந்த 09/03, 16/3 மற்றும் 20/03 ஆகிய தினங்களில் நடந்த மதிப்பாய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள சோதனை முறைகளை இங்குக் காண்போம்.

தேவை

·         கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று குறித்து கண்டறிதல்

கோவிட் 19 சோதனையின் அளவுகோல்கள் உள்ள அனைவருக்கும் நம்பகமான          நோயறிதலை வழங்குதல்

திருத்தப்பட்ட  சோதனை முறைகள் :

1.     கடந்த 14 நாட்களில் சர்வதேச பயணம் செய்த பயணிகளின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிதல்

அவர்களை 14 தினங்களுக்கு விட்டில் தனிமைப்படுத்துததல்

அவர்களுக்கு ஜுரம், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை  இருந்தால் மட்டும் சோதனை செய்வது.

நோய் உறுதி செய்யப்பட்டால் அனைத்து  குடும்ப உறுப்பின்ர்களையும் தனிமைப் படுத்துதல்

2.     நோய் உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரது அறிகுறிகளையும் ஆராய்ந்து சோதித்தல்

3.     அறிகுறிகள் உள்ள சுகாதார ஊழியர்களைச் சோதித்தல்

4.     தொடர் இருமல் மற்றும் ஜுரம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரைச் சோதித்தல்

5.     நோயால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் தென்படாவிட்டாலும் ஐந்தாம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை சோதனை செய்தல்

உலக சுகாதார நிறுவன பரிந்துரையின்படி நோய் பாதிப்பு அடைந்தவர்களின் வீட்டில் மற்றும் அதே குடியிருப்பு வலாகங்களில் வசிப்போர், அவரை  சோதித்த சுகாதார ஊழியர்கள். ஆகியோரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்”.