லண்டன்:

லக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வலிமை மிக்க  நியூசிலாந்து அணியை வங்காளதேசம் அணி எதிர்கொள்ள உள்ளது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்க  நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியில் குப்தில், காலின் முன்ரோ, டெய்லர், கேப்டன் வில்லியம்சன், போல்ட், ஹென்றி, பெர்குசன் போன்ற சிறப்பான ஆட்டக்காரர்கள் உள்ளது அணிக்கு மிகுந்த பலமாக உள்ளது. அத்துடன் இன்றைய ஆட்டத்தில் இஷ்சோதியும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படு கிறது.

ஏற்கனவே நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது நியூசிலாந்து அபாரமாக ஆடி   விக்கெட் இழப்பின்றி 29.2 ஓவர்களில் 136 ரன்னில் இலங்கையை தூக்கி எறிந்தது.

இந்த நிலையில், இன்று வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

வங்காளதேச அணியும் தற்போது வலிமையாகவே உள்ளது. முன்னாள் கேப்டன் சகீப்-அல்-ஹசன், மகமதுல்லா,முஷ்பிகுர் ரகீம்,  போன்ற வீரர்கள் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்,. அதுபோல,  முஷ்டாபிசுர், ரகுமான், சைபுதீன், சகீப்-அல்-ஹசன் போன்ற பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுக்களை பறிக்கும் தன்மை உடையவர்கள்.

இரு அணிகளும் பலமாக உள்ள நிலையில், இன்றைய ஆட்டம் பரபரப்பாகவும், அதிரடியாகவும் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வங்களாதேச அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி 330 ரன் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.