புதுடெல்லி:
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான குரூப் பி போட்டியில், இந்திய அணியை நிஷாந்த் சித்து வழிநடத்தி வருகிறார்.
நடப்பு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இந்தியா தனது கடைசி குரூப் பி ஆட்டத்தில் உகாண்டாவை வரும் சனிக்கிழமை எதிர்கொள்கிறது.