உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் விளையாட பணித்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா 20 ரன்னும் இமாம் 36 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய பாபர் 50 ரன் எடுத்தார் ரிஷ்வான் 49 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
155 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த பாகிஸ்தான் அடுத்த 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது.