ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் விளையாட பணித்தது.
42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆலவுட் ஆன பாகிஸ்தான் இந்திய அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 86 ரன்கள் கில் 16, விராத் கோலி 16 எடுத்து அவுட்டானார்கள் ஷ்ரேயஸ் 53 ரன்கள் மற்றும் கே.எல். ராகுல் 19 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வென்றது.