திருவனந்தபுரத்தில் நாளிதழ் ஒன்றின் செய்தியாளாராக இருந்த கே.எம்.பஷீர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக குடிபோதையில் கார் ஓட்டி வந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஸ்ரீராம் வெங்கிட்ராமன், பஷீர் மீது காரை மோதினார்.


சம்பவ இடத்திலேயே பஷீர் உயிர் இழந்தார். 5 பிரிவுகளில் ஸ்ரீராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது- கண் துடைப்பு நடவடிக்கை என இப்போது தெரிய வந்துள்ளது.
‘’எனக்கு மறதி நோய் உள்ளது, அதனால் தான் விபத்து நேர்ந்துள்ளது’’ என்று ஸ்ரீராம் அப்போது வாக்குமூலம் கொடுத்தார்.

அடுத்த ஆக்ஷன் , ஐ.ஏ.எஸ். வர்க்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

‘’ விபத்து நடந்து 6 மாதங்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஸ்ரீ ராம் மீதான சஸ்பெண்டை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் டாம் ஜோஸ் தலைமையிலான குழு, அரசுக்கு பரிந்துரை செய்தது.

இப்போது ஸ்ரீராம் சஸ்பெண்டை ரத்து செய்து அவரை, சுகாதாரத்துறைக்கு இணை செயலாளராக்கியுள்ளது, கேரள மாநில அரசு.

இந்த நடவடிக்கை செய்தியாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரங்கன் டிரைவ்: இளம் ஐஏஎஸ் அதிகாரியின் காருக்கு பலியான கேரள பத்திரிகையாளர்!